Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுவரும் கபடி உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்திரேலியாவுக்கெதிராக நேற்றுச் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
6ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டிகளில், இதுவரை இடம்பெற்றுள்ள அத்தனை தொடர்களிலும் வெற்றிபெற்றுச் சம்பியனாகியுள்ள இந்திய அணி, இம்முறை தொடரின் முதலாவது போட்டியில், தென்கொரிய அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையிலேயே, அந்தத் தோல்வியிலிருந்து மீளும் விதமாக, அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில், அவ்வணி 54-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய அவ்வணி, 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்ததோடு, பின்னர் 20-2 என்ற கணக்கில் காணப்பட்டது. முதலாவது பாதி முடிவில், 32-7 என்ற புள்ளிகள் கணக்கில், அவ்வணி முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், சிறிதளவு போட்டித்தன்மையை அவுஸ்திரேலியா வெளிப்படுத்தினாலும், இந்திய அணி இலகுவாக வெற்றிபெறுவதைத் தடுக்க முடியவில்லை. அவ்வணி, 54-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago