Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்ற நிலையில், காலியில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஒஷாத பெர்ணாண்டோ, ஜெஃப்ரி வன்டர்சே, அசித பெர்ணாண்டோவை பதும் நிஸங்க, ரமேஷ் மென்டிஸ், லஹிரு குமார பிரதியிட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் டொட் மேர்பியை கூப்பர் கொனோலி பிரதியிட்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலேயே நிஸங்கவை லையனிடம் இழந்தது. பின்னர் திமுத் கருணாரத்னவும், தினேஷ் சந்திமாலும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 36 ஓட்டங்களுடன் லையனிடம் கருணாரத்ன வீழ்ந்தார். தொடர்ந்து வந்த அஞ்சலோ மத்தியூஸும் லையனிடம் உடனே விழ, சிறிது நேரத்திலேயே கமிந்து மென்டிஸும் ட்ரெவிஸ் ஹெட்டிடம் வீழ்ந்தார். அடுத்து வந்த தனஞ்சய டி சில்வாவும் உடனேயே மிற்செல் ஸ்டார்க்கிடம் வீழ்ந்தார்.
சிறிது நேரத்தில் 74 ஓட்டங்களுடன் மத்தியூ குனுமென்னிடம் சந்திமால் வீழ்ந்தார். அடுத்து வந்த குசல் மென்டிஸும், ரமேஷ் மென்டிஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 28 ஓட்டங்களுடன் ஸ்டார்க்கிடம் ரமேஷ் மென்டிஸ் வீழ்ந்ததோடு, அடுத்த பந்திலேயே பிரபாத் ஜெயசூரியவும் வீழ்ந்தார்.
தொடர்ந்து வந்த நிஷான் பீரிஸும் குனுமென்னிடம் விழ இன்றைய முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை பெற்றுள்ளது. தற்போது குசல் மென்டிஸ் 59 ஓட்டங்களுடனும், லஹிரு குமார ஓட்டமெதுவும் பெறாமலும் களத்திலுள்ளனர்.
22 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
41 minute ago