2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள கனடா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கெதிரான குழு டி போட்டியில் கனடா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கனடாவின் அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

உடல்நலமின்மை காரணமாக இப்போட்டியில் நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் விளையாடாத நிலையில், டரைல் மிற்செல் அணிக்குத் தலைமை தாங்கியதுடன் சான்ட்னெரை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான கோல் மக்கொஞ்சி பிரதியிட்டிருந்தார். இது தவிர லொக்கி பெர்கியூசனை கைல் ஜேமிஸன் பிரதியிட்டிருந்தார்.

நியூசிலாந்துக் குழாமுடன் பயணித்த மக்கொஞ்சி, திங்கட்கிழமையே (16) மிஷெல் பிறேஸ்வெல்லை குழாமில் பிரதியிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X