Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, எவெர்ற்றன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
செல்சி, சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. அடையாளப்படுத்தப்படாமல் நின்ற ஈடின் ஹஸார்ட், ஒரு வீரரைத் தாண்டிச் சென்று, கோல் காப்பாளரின் கால்களுக்குள்ளால், போட்டியின் ஆறாவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்று, செல்சிக்கு முன்னிலையை வழங்கினார்.
இதன் பின்னர், பல தடவைகள் சௌதாம்டன் பந்தை வைத்திருந்தபோதும், செல்சியின் இத்தாலிய முகாமையாளரான அந்தோனியோ கொந்தே, தனது நாட்டில் உள்ளது போன்று, மத்திய பின்கள வீரர்களைக் கொண்டு அமைத்த பின்களத்தை அமைத்தமையால், அதைத் தாண்டி செல்ல முடியவில்லை.
மறுபக்கம், மேலும் கோல்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருந்த செல்சியின் ஹஸார்ட், டியகோ கொஸ்டா ஆகியோரின் உதைகள் தடுக்கப்பட்டிருந்தன. எனினும், போட்டியின் 55ஆவது நிமிடத்தில், 22 யார் தூரத்திலிருந்து, அபாரமான கோலொன்றை கொஸ்டா பெற்றார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், நான்காமிடத்துக்கு செல்சி முன்னேறியது. இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரல் 15ஆம் திகதியே, இங்கிலாந்து பிறீமியர் லீக் வரிசையில் நான்காமிடத்தில் இருந்தது. செல்சியை விட ஒரு புள்ளி அதிகமாகப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள், பெற்ற கோல்களின் அடிப்படையில், முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.
இதேவேளை, எவெர்ற்றன், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வெற்றி பெற்றது. எவெர்ற்றன் சார்பாக, றொமேலு லுக்காக்கு, றொஸ் பார்க்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருக்காத எவெர்ற்றன், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், ஆறாமிடத்தில் காணப்படுகிறது. இரண்டு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஐந்தாவது இடத்தில் உள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago