Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக எபெரெச்சி எஸ்ஸே, விக்டர் ஜைனோகர்ஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றன்டல் கொலோ முவானி பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும் காணப்படுகின்றன. செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட், நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் ஆகியன தலா 45 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முறையே நான்காம், ஐந்தாம், ஆறாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட யுனைட்டெட் ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளதோடு, ஆர்சனல் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
5 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
2 hours ago