2025 ஜூலை 05, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், சிற்றி, டொட்டென்ஹாம் வென்றன

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் லிவர்பூல், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், செல்சி உள்ளிட்ட அணிகள் வென்றன.

ஷெஃபீல்ட் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்ஜினியோ விஜ்னால்டும் பெற்றிருந்தார்.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கப்ரியல் ஜெஸூஸ், றியாட் மஹ்ரேஸ், ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் கல்வேர்ட்-லூவின் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற செளதாம்டனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, தன்குய் என்டொம்பிலி, ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி இங்ஸ் பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, ஜோர்ஜினியோ, வில்லியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

நிலை    அணி     போட்டிகள்   கோல் வித்தியாசம் புள்ளிகள்

  1. லிவர்பூல்                7                         13                                21
  2. சிற்றி                       7                         20                                16
  3. வெஸ்ட் ஹாம்       7                          1                                 12
  4. டொட்டென்ஹாம் 7                          5                                 11
  5. லெய்செஸ்டர்         6                          3                                 11
  6. செல்சி                       7                          1                                 11                    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .