Shanmugan Murugavel / 2025 ஜனவரி 23 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொல்கத்தாவில் புதன்கிழமை (22) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அர்ஷ்டீப் சிங் (2), வருண் சக்கரவர்த்தி (3), ஹர்திக் பாண்டியா (2), அக்ஸர் பட்டேலிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் 68 (44) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 133 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 79 (34) ஓட்டங்களோடு 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஜொஃப்ரா ஆர்ச்சர் 4-0-21-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவானார்.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago