Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோல்வியடைந்தது.
பர்மா சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியானோ ட்ரொய்லோ பெற்றிருந்தார்.
இதேவேளை அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது. அத்லாண்டா சார்பாக மரியோ பஸ்காலிச், லாஸர் சமர்டிஸிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை சாம் பியூகெமா பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலன் காணப்படுகின்றது. நாப்போலி, றோமா தலா 50 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகள் காரணமாக மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
4 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
2 hours ago