Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம், இன்று இடம்பெற்றது.
மொஹாலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 8 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் பந்திலேயே தனது 9ஆவது விக்கெட்டை இழந்ததோடு, 283 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் ஜொனி பெயர்ஸ்டோ 89 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜயந்த் யாதவ், இரவீந்திர ஜடேஜா மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸை விளையாடிய இந்திய அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களுடன் காணப்படுகிறது. இதன்படி, 4 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 12 ஓட்டங்களால் மாத்திரமே அவ்வணி பின்னிலையில் காணப்படுகிறது.
39 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 2ஆவது விக்கெட்டை 73 ஓட்டங்களுக்கு இழந்தது. அதன் பின்னர் செற்றேஸ்வர் புஜாரா, விராத் கோலி இருவரும் சிறப்பான இணைப்பாட்டத்தைப் பகிர்ந்து, ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் என்ற சோதனையான நிலைமையை எதிர்கொண்டது. பின்னர் கோலியும் இரவிச்சந்திரன் அஷ்வினும், 48 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். ஆனால், 6ஆவது விக்கெட்டாக கோலி ஆட்டமிழக்கும் போது, 6 விக்கெட்டுகளை இழந்து 204 என்ற நிலையில், அவ்வணி தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும், பிரிக்கப்படாத 67 ஓட்டங்களைப் பகிர்ந்து, இந்திய அணிக்கு முன்னிலையை வழங்கினர். துடுப்பாட்டத்தில் விராத் கோலி 62, அஷ்வின் ஆட்டமிழக்காமல் 57, செற்றேஸ்வர் புஜாரா 51, பார்த்திவ் பட்டேல் 42, ஜடேஜா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடில் றஷீத் 3 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago