Shanmugan Murugavel / 2016 நவம்பர் 28 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொஹாலியில் இடம்பெற்றுவரும் மூன்றாவது போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட்டுகழையிழந்து 78 ஓட்டங்களை தமது இரண்டாவது இனிங்ஸில் பெற்றுள்ள இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையினை விட இன்னும் 56 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
தற்போது களத்தில், ஜோ ரூட் 36 ஓட்டங்களுடனும் கரித் பற்றி ஓட்டமெதனையும் பெறாமலும் உள்ளனர். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 417 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக, இரவீந்திர ஜடேஜா 90, இரவிச்சந்திரன் அஷ்வின் 72, விராத் கோலி 62, ஜயந்த் யாதவ் 55, செற்றேஸ்வர் புஜாரா 51, பார்த்திவ் பட்டேல் 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்டுகளையும் அடில் ரஷீட் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜொனி பெயார்ஸ்டோவின் 89, ஜொஸ் பட்லரின் 43 ஓட்டங்கள் துணையோடு தமது முதலாவது இனிங்கஸில் 283 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் ஷமி மூன்று விக்கெட்டுகளையும், இரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago