2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவின் சுழலில் சரிந்தது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் 5ஆவது நாளான இன்று, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கிய இங்கிலாந்து அணி, 246 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

405 ஓட்டங்கள் என்ற இலக்குக் காணப்பட்டாலும், வெற்றி - தோல்வியற்ற முடிவை முன்னிலைப்படுத்திக் கொண்டு, 2 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, மேலதிகமாக 37.1 ஓவர்கள் மாத்திரம் நிலைத்து நின்று, 158 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரவிச்சந்திரன் அஷ்வின், அறிமுக வீரர் ஜயந்த் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் இரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தவிர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் முதல் இனிங்ஸில் 167 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 81 ஓட்டங்களையும் பெற்று, இந்திய அணியின் வெற்றிக்குப் பிரதான காரணமாக அமைந்த தலைவர் விராத் கோலி, இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டி, வெற்றி - தோல்வியின்றி நிறைவடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் கிடைத்த இவ்வெற்றியின் உதவியோடு, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்த போட்டி, மொஹாலியில் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

ஸ்கோர் விவரம்...

இந்தியா: 455/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 167, செற்றேஸ்வர் புஜாரா 119, இரவிச்சந்திரன் அஷ்வின் 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/62, மொய்ன் அலி 3/98, அடில் றஷீட் 2/110)

இங்கிலாந்து: 255/10 (பென் ஸ்டோக்ஸ் 70, ஜோ றூட் 53, ஜொனி பெயர்ஸ்டோ ஆ.இ 53, அடில் றஷீட் ஆ.இ 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 5/67)

இந்தியா: 204/10 (விராத் கோலி 81 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டுவேர்ட் ப்ரோட் 4/33, அடில் றஷீட் 4/82)

இங்கிலாந்து: 158/10 (அலஸ்டெயர் குக் 54, ஜொனி பெயர்ஸ்டோ ஆ..இ 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜயந்த் யாதவ் 3/30, அஷ்வின் 3/52, மொஹமட் ஷமி 2/30, இரவீந்திர ஜடேஜா 2/35)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .