Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

காயமடைந்துள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன், இடம்பெறவுள்ள இந்தியத் தொடரில் பங்குபற்றமுடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இங்கிலாந்துத் தொடர், எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது காயமடைந்துள்ள அன்டர்சன், இன்னும் 3 வாரங்களுக்குப் பந்துவீச முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அன்டர்சன், இங்கிலாந்தின் பங்களாதேஷ் தொடரைத் தவறவிட்டமை குறித்துத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஆனால், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், சாதாரணமாக இருக்கும் போது, மிகவும் சிறப்பாக உணர்வதாகவும், ஆனால் பந்துவீச ஆரம்பித்தால், வலியை உணர்வதாகவும் தெரிவித்தார். எனவே, இன்னும் சில வாரங்கள் ஓய்வெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியத் தொடரைத் தவறவிட வேண்டியேற்படாது என நம்பிக்கை வெளியிட்ட அவர், அந்தத் தொடரில் தனது பங்கை வகிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .