Janu / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான்-இந்தியா ரி-20 உலகக் கிண்ண போட்டியை இலங்கையில் விளையாடுவதற்கு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய முட்டுக்கட்டையை இணக்கமாக தீர்க்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் நட்புரீதியான உரையாடலின் போது, பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் சவாலான காலங்களில் தோளோடு தோள் நின்று செயல்பட்டதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
ஜனாதிபதியின் கோரிக்கையை பிரதமர் வரவேற்றதுடன் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பிரதிநிதிகள் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆலோசனைகள் மற்றும் இலங்கை மற்றும் பிற நட்பு நாடுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, பெப்ரவரி 15 அன்று இந்தியா-பாகிஸ்தான் ரி20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் விளையாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026