Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 மார்ச் 04 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மொஹாலியில் இன்று ஆரம்பமாகும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் என்பதுடன், இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் சுரங்க லக்மாலின் இறுதி சர்வதேசப் போட்டித் தொடர் ஆகும்.
இதேவேளை, இப்போட்டியே டெஸ்ட் போட்டியொன்றுக்கு ஷர்மா தலைமை தாங்குவது முதற்தடவை ஆகும்.
இந்திய அணி: றோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், ஹனும விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், றிஷப் பண்ட், இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா.
இலங்கையணி: திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, பதும் நிஸங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அஸலங்க, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்ணான்டோ, லஹிரு குமார.
21 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
59 minute ago