2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 23 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வென்றிருந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 269/10 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 47 (47), அலெக்ஸ் காரி 38 (46), ட்ரெவிஸ் ஹெட் 33 (31), மர்னுஸ் லபுஷைன் 28 (45), ஷோன் அபொட் 26 (23), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 25 (26), டேவிட் வோர்னர் 23 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்டிக் பாண்டியா 3/44, குல்தீப் யாதவ் 3/56, மொஹமட் சிராஜ் 2/37, அக்ஸர் பட்டேல் 2/57)

இந்தியா: 248/10 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 54 (72), ஹர்டிக் பாண்டியா 40 (40), ஷுப்மன் கில் 37 (49), லோகேஷ் ராகுல் 32 (50), றோஹித் ஷர்மா 30 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 4/45, அஸ்தன் அகர் 2/41, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/43, ஷோன் அபொட் 1/50)

போட்டியின் நாயகன்: அடம் ஸாம்பா

தொடரின் நாயகன்: மிற்செல் மார்ஷ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X