Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டின் முதல் நாளில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதோடு, மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், மெல்பேணில் இன்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஷுப்மன் கில்லை வொஷிங்டன் சுந்தர் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. இரவீந்திர ஜடேஜாவிடம் 60 ஓட்டங்களுடன் கொன்ஸ்டாஸ் வீழ்ந்த நிலையில் உஸ்மான் கவாஜாவும், மர்னுஸ் லபுஷைனும் இனிங்ஸை நகர்த்தினர்.
ஜஸ்பிரிட் பும்ராவிடம் 57 ஓட்டங்களுடன் கவாஜா வீழ்ந்த நிலையில் லபுஷைனும், ஸ்டீவன் ஸ்மித்தும் இனிங்ஸைக் கொண்டு சென்றபோது 72 ஓட்டங்களுடன் வொஷிங்டன் சுந்தரிடம் லபுஷைன் வீழ்ந்ததோடு, ட்ரெவிஸ் ஹெட் மற்றும் மிற்செல் மார்ஷ் ஆகியோர் உடனேயே சிறிய இடைவெளிகளில் பும்ரா அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
இந்நிலையில் ஸ்மித்தும், அலெக்ஸ் காரியும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 31 ஓட்டங்களுடன் ஆகாஷ் டீப்பிடம் காரி விழ இன்றைய முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. தற்போது களத்தில் ஸ்மித் 68 ஓட்டங்களுடனும், ஸ்மித் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago