2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இன்று இங்கிலாந்து-அவுஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இன்று மூன்றாவது ஒருநாள் சர்வதேசப்போட்டி மன்செஸ்டரில், இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கின்ற போதும், அவ்வணி காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உப அணித்தலைவர் டேவிட் வோணர் காயத்தால் தொடரிலிருந்து விலகி, அவருக்காக காயத்திலிருந்து குணமடைந்த ஆரோன் பின்ச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஷேன் வொட்சன், நேதன்‌ கூர்ட்டர்நைல் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்காக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த பீற்றர் ஹாண்ட்ஸ்கொம்ப், ஜோன் ஹஸ்டிங்ஸ் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் பின்சும், ஏற்கனவே அணிக்குழாமில் உள்ள மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஜேம்ஸ் பட்டின்சன் ஆகியோரே இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து குழாமில் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லருக்காக, மிகுதி போட்டிகளுக்கு ஜொனி பியர்ஸ்டோ பிரதியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேரடியாக பதினொரு பேர் கொண்ட அணியில் உள்வாங்கப்படுவதோடு, சராசரியாக உள்ள பந்துவீச்சு வரிசையில், வேறு வகைமையை உட்படுத்தும் பொருட்டு இடதுகை மித வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியும் இன்றைய போட்டிக்கான அணியில் உள்வாங்கப்படுவார் என தெரியவருகிறது.

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி – ஜோ பேர்ன்ஸ், ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், ஜோர்ஜ் பெய்லி, மார்க்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மத்தியு வேட், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ்

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேம்ஸ் டெய்லர், ஒயின் மோர்கன், ஜொனி பியர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீட், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஸ்டீவன் ஃபின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .