Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இன்டர் மிலனுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாக கெவின் டி ப்ரூனே, ஸ்கொட் மக்டொமினே, அன்ட்ரே-பிராங்க் ஸம்போ அன்குய்ஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹகன் கல்ஹனொக்லு பெற்றிருந்தார்.
இதேவேளை கிறெமொனெஸேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது. அத்லாண்டா சார்பாக மார்கோ பிரெஸியானி பெற்றதோடு, கிறெமொனெஸே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றிருந்தார்.
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago