2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இன்டர் மியாமியிலேயே தொடரப் போகும் மெஸ்ஸி?

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க மேஜர் லீக் சொக்கர் கழகமான இன்டர் மியாமியும் லியனல் மெஸ்ஸியும் புதியதொரு பல்லாண்டு ஒப்பந்தத்தை கழகத்தின் தலைவரான மெஸ்ஸிக்கு இறுதி செய்வதில் நெருங்கியுள்ளதாகவும் சில விடயங்கள் மாத்திரமே இணங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பும் பேரம்பேசலின் இறுதிக் கட்டங்களிலுள்ளதாகவும், ஒப்பந்தமானது விரைவில் இறுதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

முதலில் 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி  இரண்டரை ஒப்பந்தத்தில் இன்டர் மியாமியுடன் மெஸ்ஸி  கைச்சாத்திட்ட நிலையில் அது 2025 பருவகாலத்துடன் முடிவுக்கு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X