Editorial / 2017 ஜூலை 05 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில், நேற்று முன்தினம் (03) ஆரம்பமாகிய விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டிகளில் வென்ற, நடப்புச் சம்பியன் அன்டி மரே, உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர், இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
உலகின் முதல்நிலை வீரரான, ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே, 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் புப்லிக்கை வென்றார்.
உலகின் இரண்டாம் நிலை வீரரான, ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-1, 6-3, 6-2 என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மனை வென்றார்.
இந்நிலையில், உலகின் மூன்றாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 4-6, 6-3, 4-6, 1-6 என்ற செட் கணக்கில், ரஷ்யாவின் டனில் மெட்வெடேவிடம் தோல்வியுற்று, தொடரிலிருந்து வெளியேறினார்.
உலகின் ஆறாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிக், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட்களில், ஜேர்மனியின் பிலிப் கூல்சைபரை வென்று, இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-2, 6-2, 6-0 என்ற நேர் செட்களில், இத்தாலியின் மார்க்கோ செட்டினாக்கோவை வென்று, இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, சிமோனா ஹலெப், 6-4, 6-1 என்ற நேர் செட்களில், நியூசிலாந்தின் மரினா எரகோவிக்கை வென்றார்.
செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில், இத்தாலியின் றொபேர்ட்டா வின்சியை வென்றார்.
உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான, உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 7-5, 7-6 (10-8) என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் அஷ்லி பாட்டியை வென்று, இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான, ஐக்கிய இராச்சியத்தின் ஜொஹன்னா கொன்டா, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-2, 6-2 என்ற நேர் செட்களில், தாய்வானின் செய் ஸுவெய்யை வென்று, இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான, ஸ்லோவாக்கியாவின் டொமினிக்கா சிபுல்கோவா, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 3-6, 6-7 என்ற செட் கணக்கில், ஜேர்மனியின் அன்ட்றியா பெட்கோவிக்கை வென்றார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago