2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பால், உள்ளூர் கழகங்களுக்கிடையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் AFC கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த பெங்களூரு கால்பந்தாட்ட அணி தகுதிபெற்றுள்ளது.

மலேஷியாவைச் சேர்ந்த ஜொஹோர் தருல் தா'ஸிம் அணிக்கும் பெங்களூரு கால்பந்தாட்டக் கழகத்துக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது பிரிவுப் போட்டி, நேற்று இரவு இடம்பெற்றது. இதன் முதலாவது அரையிறுதிப் போட்டி, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் வெல்பவர் எவரோ, அவரே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார் என்ற நிலை காணப்பட்டது.

இப்போட்டியில், 11ஆவது நிமிடத்தில், மலேஷிய அணியின் மொஹமட் சாபிக் ரஹீம், முதலாவது கோலைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். ஆனால், பெங்களூரு அணியின் தலைவர் சுனில் சேத்ரி, போட்டியின் 41ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று, முதலாவது பாதியைச் சமநிலையில் முடித்துக் கொண்டார்.

இரண்டாவது பாதி ஆரம்பித்த போது, 67ஆவது நிமிடத்தில், தலைவர் சுனில் சேத்ரி, மற்றொரு கோலைப் பெற்றுக் கொடுத்து, 2-1 என்ற முன்னிலையை வழங்கியதோடு, 76ஆவது நிமிடத்தில் ஜுவானன் பெற்ற கோலின் மூலம், அவ்வணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வழங்கியது. அதுவே, அவ்வணிக்கான வெற்றி நிலையாகவும் மாறியது.

இதன்படி, 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், ஈராக்கின் அல்-குவா அல்-ஜாவியா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில், தென்கொரியாவில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .