Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, தென்னாபிரிக்கா பங்கேற்ற முத்த்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
கராச்சியில் புதன்கிழமை (12) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஹென்றிச் கிளாசென்னின் 87 (56), மத்தியூ பிறெட்ஸ்கேயின் 83 (84), அணித்தலைவர் தெம்பா பவுமாவின் 82 (96), கைல் வெரைனின் ஆட்டமிழக்காத 44 (32) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷகீன் ஷா அஃப்ரிடி 2, குஷ்டில் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 353 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சல்மான் அக்ஹாவின் 134 (103), அணித்தலைவர் மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 122 (128), பக்கர் ஸமனின் 41 (28) ஓட்டங்களோடு 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக அக்ஹா தெரிவானார்.
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago