2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு 5ஆவது தோல்வி

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் பெண்கள் உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி வென்ற அதேநேரம், இலங்கையை, மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.

இதில், உலகக் கிண்ணப் போட்டியொன்றில், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக, இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளில் பெறும் முதலாவது வெற்றியாக அமைந்தது. குறித்த காலத்தில், 6 போட்டிகளில் அவ்வணி தோல்வியடைந்திருந்தது.

மறுபக்கமாக, இலங்கை அணி, இத்தொடரில் தனது 5ஆவது போட்டியில் விளையாடிய போதிலும், 5ஆவது போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா:

இங்கிலாந்து: 259/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: தம்மி பியூமொன்ட் 49 (88), கேத்தரின் பிரன்ட் ஆ.இ 45 (43), ஜெனி கண் 39 (42), சாரா டெய்லர் 35 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: எலைஸ் விலானி 3/42, கிறிஸ்டின் பீம்ஸ் 2/44)

அவுஸ்திரேலியா: 256/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: எலைஸ் பெரி 70 (86), மெக் லனிங் 40 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலெக்ஸ் ஹார்ட்டலி 2/31, கேத்தரின் பிரன்ட் 2/42, ஜெனி கண் 2/54)

மே.தீவுகள் எதிர் இலங்கை:

மே.தீவுகள்: 229/9 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: மெரிஸா அகுலெய்ரா ஆ.இ 46 (97), டீன்ட்ரா டொட்டின் 38 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்ரீபால வீரக்கொடி 3/38, அமா காஞ்சனா 2/50, இனோக்கா ரணவீர 2/56)

இலங்கை: 182/10 (48 ஓவ.) (துடுப்பாட்டம்: ஷஷிகலா சிரிவர்தன 33 (67), பிரசாதனி வீரக்கொடி 30 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: அனிஸா மொஹமட் 3/39, ஷனல் டாலே 2/30, அ/பி பிளெற்சர் 2/38).


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .