2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைக்கெதிரான டெஸ்டில் பங்களாதேஷ் நிதானமான ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2022 மே 16 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் நேற்று  ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் நிதானமான ஆரம்பத்தை பங்களாதேஷ் பெற்றுள்ளது.

இன்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் மூலம் இனிங்ஸை நகர்த்தியது.

பின்னர் 66 ஓட்டங்களுடன் நயீம் ஹஸனிடம் சந்திமால் வீழ்ந்ததுடன், அடுத்து வந்த நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மென்டிஸ், லசித் எம்புல்தெனிய ஆகியோர் நயீம் ஹஸன், ஷகிப் அல் ஹஸனிடம் வீழ்ந்தனர். தொடர்ந்து விஷ்வ பெர்ணாண்டோவின் இணைப்பாட்டத்தில் மத்தியூஸ் ஓட்டங்களைப் பெற்றபோதும், நயீம் ஹஸனிடம் அசித பெர்ணாண்டோவிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து இறுதி விக்கெட்டாக 199 ஓட்டங்களுடன் மத்தியூஸும் நயீம் ஹஸனிடம் வீழ்ந்தார். தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 397 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில், நயீம் ஹஸன் 6, ஷகிப் அல் ஹஸன் 3, தஜியுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற பங்களாதேஷ் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், தமிம் இக்பால் 39, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .