2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 30 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று ஆரம்பித்த முதலாவது போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், அணித்தலைவர் பற் கமின்ஸ் 26 ஓட்டங்களுடனும், நேதன் லையன் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக கமரொன் கிறீன் 77, உஸ்மான் கவாஜா 71, அலெக்ஸ் காரி 45, டேவிட் வோர்னர் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரமேஷ் மென்டிஸ் 4, ஜெஃப்ரி வன்டர்சே 2, தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 212/10 (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 58, அஞ்சலோ மத்தியூஸ் 39, திமுத் கருணாரத்ன 28, பதும் நிஸங்க 23, ரமேஷ் மென்டிஸ் 22, தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/90, மிற்செல் ஸ்வப்ஸன் 3/55, பற் கமின்ஸ் 1/25, மிற்செல் ஸ்டார்க் 1/31)

அவுஸ்திரேலியா: 313/8 (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 77, உஸ்மான் கவாஜா 71, அலெக்ஸ் காரி 45, பற் கமின்ஸ் ஆ.இ 26, டேவிட் வோர்னர் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 4/107, ஜெஃப்ரி வன்டர்சே 2/68, தனஞ்சய டி சில்வா 1/8)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .