Shanmugan Murugavel / 2025 ஜனவரி 29 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாள் முடிவில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் இன்று (29) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஜொஷ் இங்லிஸ் அறிமுகத்தை மேற்கொண்டதோடு நேதன் லையன், மத்தியூ கூனுமென், டொட் மேர்பி என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மிற்செல் ஸ்டார்க்கோடு களமிறங்கினர். இலங்கையும் அசித பெர்ணாண்டோடு, பிரபாத் ஜெயசூரிய, நிஷான் பீரிஸ், ஜெஃப்ரி வன்டர்சே என மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா வேகமாக ஓட்டங்களைச் சேர்க்க சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது.
பின்னர் 57 ஓட்டங்களுடன் ஜெயசூரியவிடம் ஹெட் வீழ்ந்தார். அடுத்து வந்த மர்னுஸ் லபுஷைனும் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓட்டங்களுடன் வன்டர்சேயிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த கவாஜாவும், ஸ்மித்தும் ஓட்டங்களை தொடர்ந்து குவித்த நிலையில், நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. தற்போது களத்தில் கவாஜா 147 ஓட்டங்களுடனும், ஸ்மித் 104 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இந்த இனிங்ஸில் ஓர் ஓட்டத்தைப் பெறும்போது 10,000 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றவராக ஸ்மித் மாறினார்.
25 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
44 minute ago