2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 05 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், வெலிங்டனில் இன்று (05) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார். இலங்கை சார்பாக வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்க அறிமுகத்தை மேற்கொண்டார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்திலேயே மற் ஹென்றியிடம் பதும் நிஸங்கவையும், ஜேக்கப் டஃபியிடம் குசல் மென்டிஸையும் இழந்ததோடு, கமிந்து மென்டிஸ் ரண் அவுட்டாக தடுமாறியது.

தொடர்ந்து வந்த அணித்தலைவர் சரித் அசலங்கவும் நாதன் ஸ்மித்திடம் வீழ்ந்தபோதும் அவிஷ்க பெர்ணாண்டோ, ஜனித் லியனகேயின் இணைப்பாட்டத்தில் இனிங்ஸை இலங்கை நகர்த்தியபோதும் 36 (54) ஓட்டங்களுடன் லியனகே சான்ட்னெரிடமும், 56 (63) பெர்ணாண்டோ ஸ்மித்திடமும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர்.

பின்னர் சமிது விக்ரமசிங்கவும், வனிது ஹசரங்கவும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் ஹென்றியிடம் 22 (42) ஓட்டங்களோடு விக்ரமசிங்க வீழ்ந்ததோடு, அடுத்த ஹென்றியின் ஓவரில் 35 (33) ஓட்டங்களோடு ஹசரங்கவும் வீழ்ந்தார். இதற்கடுத்த ஹென்றியின் ஓவரில் மலிங்க வீழ்ந்ததோடு, அசித பெர்ணாண்டோ இரண்டு ஓவர்களில் டஃபியிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 43.4 ஓவர்களில் 178 ஓட்டங்களையே இலங்கை பெற்றது.

பதிலுக்கு 179 ஓட்டங்களை வெற்றியிலக்காகக்  கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றஷின் றவீந்திர, வில் யங்க் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேகரித்த நிலையில் 45 (36) ஓட்டங்களுடன் விக்ரமசிங்கவிடம் றவீந்திர வீழ்ந்தார். பின்னர் வந்த மார்க் சப்மனின் ஆட்டமிழக்காத 29 (36) ஓட்டங்களின் துணையுடனும் வில் யங்கின் ஆட்டமிழக்காத 90 (86) ஓட்டங்களோடு 26.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் நியூசிலாந்து வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஹென்றி தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .