2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை ஏற்கெனவே இலங்கை கைப்பற்றியபோதும் அடுத்து டெஸ்ட் தொடர் வரவிருக்கின்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவமாகிறது.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரையும் உள்ளடக்கிய முழுமையான சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலியா மேற்கொண்டு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றபோதும் காலம் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சுக்கான அவுஸ்திரேலிய அணியின் தடுமாற்றமானது அதிகரித்து வருகிறது.

அதுவும் இத்துணை நாளும் நடைபெற்ற மைதானங்களை விட டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள காலி மைதானமானது மேலும் சுழற்சியை வழங்குமென்ற நிலையில் அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை மீட்டெடுக்க இப்போட்டியில் துடுப்பாட்டவீரர்கள் மேம்பட்ட பெறுபேற்றைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக அனைத்துத் துடுப்பாட்டவீரர்களும் ஆரம்பங்களைப் பெறுகின்றபோதும் எவரும் போட்டியைத் தீர்மானிக்கக் கூடிய வகையிலான குறிப்பிடத்தக்க இனிங்ஸொன்றை ஆடவில்லை.

அந்தவகையில், மர்னுஸ் லபுஷைன், கமரொன் கிறீனுக்காக ஸ்டீவ் ஸ்மித், ஜொஷ் இங்கிலிஷ் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. தவிர, பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட்டுக்கு ஓய்வு வழங்கப்படாலெம்ன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக இலங்கையணியானது மாற்றமெதுவையும் மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகின்றபோதும், நிரோஷைன் டிக்வெல்லவுக்காக தனுஷ்க குணதிலக மீண்டுன் அணிக்குத் திரும்பும் வாய்ப்பு காணப்படுவதோடு, தொடர் ஏற்கெனவே வெல்லப்பட்ட நிலையில் பானுக ராஜபக்‌ஷ, லஹிரு மதுஷங்க உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .