Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு, இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு வீரர்களை, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு, இடைநிறுத்தியுள்ளது. அவர்களது மாதிரிகள், மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்தே, அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த பளு தூக்கல் வீரரான அப்டி ஔகடோவ், உக்ரைனைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரரான மக்சிம் மஸுரிக் ஆகியோரே, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், ஔகடோவ், இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 85 கிலோகிராம் எடைப் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றிருந்ததோடு, மஸுரிக், 2012ஆம் ஆண்டு 18ஆவது இடத்தையே பெற்றார்.
2008ஆம் ஆண்டிலும் 2012ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஊக்கமருந்துப் பாவனையென்பது அதிகளவில் காணப்பட்டதோடு, அவ்வாறான ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டோர், அப்போதைய சோதனைகளில் சிக்கியிருக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக, முன்னைய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், நவீன முறையில் மீளச் சோதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 98 வீரர்கள், இவ்வாறு சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago