2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 05 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 27ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பிக்கவுள்ள பத்தொன்பது வயதுக்குட்பாட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியுள்ளது. பாதுகாப்புக் காரணங்கள் காரணமாகவே மேற்படித் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா விலகியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அணி, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்திலிருந்து விலகியபோது, அவுஸ்திரேலியாவின் விருப்பங்களுக்கு பங்களாதேஷில் காணப்பட்ட அதே உயர் ஆபத்து தற்போதும் காணப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை வழங்கியமையை அடுத்தே மேற்படி தொடரிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் சுதர்லாண்ட் தெரிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு பதிலாக, கடந்த ஒக்டோபரில் கோலாலம்பூரில் இடம்பெற்ற தகுதிகாண் தொடரில் இரண்டாமிடம் பெற்ற அயர்லாந்தை, பிரதான தொடரில் பங்கேற்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் முடிவை மதிப்பதாக தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபை, எனினும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களுக்கான பாதுகாப்பை தீவிரமாக மேற்கொள்வதாக அதன் தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். தவிர, இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேற்படித் தொடரில், அவுஸ்திரேலியாவானது, இந்தியா, நேபாளம், நியூசிலாந்துடன் குழு டியில் இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .