Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் ஆப்கானிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஹமிட் ஹஸன் இடம்பெற்றுள்ளார்.
இறுதியாக, 2016ஆம் ஆண்டு ஜுனிலேயே, ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் ஹமிட் ஹஸன் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டதற்கு சிரேஷ்ட வீரர்களான மொஹமட் நபி, ரஷீட் கான் ஆகியோர் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தபோதும், உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குல்படின் நைப்பே தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான, அயர்லாந்துக்கெதிரான தொடரின் குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஸகிர் கான், வேகப்பந்துவீச்சாளர்கள் ஷபூர் ஸட்ரான், ஃபாரீட் அஹமட், முன்வரிசை துடுப்பாட்டவீரர் ஜாவீட் அஹ்மாடி ஆகியோர் உலகக் கிண்ண குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: குல்படி நைப் (அணித்தலைவர்), மொஹமட் ஷஷாட் (விக்கெட் காப்பாளர்), நூர் அலி ஸட்ரான், ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மட் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஷ்மத்துல்லா ஷகிடி, நஜிபுல்லா ஸட்ரான், சமியுல்லா ஷின்வாரி, மொஹமட் நபி, ரஷீட் கான், தவால்ட் ஸட்ரான், அஃப்தாப் அலாம், ஹமிட் ஹஸன், முஜீப் உர் ரஹ்மான்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago