Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 17 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டு உளவியலாளரைச் சந்திக்கும்படியும் அல்லது எட்டு வாரத் தடையை எதிர்கொள்ளுமாறு, சர்ச்சைக்குரிய, அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்யோஸுக்கு, தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.
இது தவிர, கடந்த வாரம் விதிக்கப்பட்ட 16,500 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக, 25,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தண்டமும் கிர்யோஸுக்கு, தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு விதித்துள்ளது.
இதேவேளை, விளையாட்டு உளவியலாளர் ஒருவரின் நடத்துகையின் கீழான திட்டத்துக்குள் பிரவேசித்தால் அல்லது அதற்கு இணையான, தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பினால் அனுமதிக்கப்பட்ட திட்டத்துக்குள் பிரவேசித்தால், எட்டு வாரத் தடையானது, மூன்று வாரமாக குறைக்கப்படும் என தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் 14ஆம் நிலை வீரரான, 21 வயதான கிர்யோஸ், கடந்த வாரம் இடம்பெற்ற ஷங்காய் பகிரங்க டென்னிஸ் தொடரில், புள்ளிகளை இழந்தபோது, இரகசிகர்களுடன் வாக்குவாதப்பட்டமை காரணமாகவே, மேற்குறித்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஸ்டான் வொர்விங்காவுடன், கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில், அவரது நண்பி தொடர்பாக, கருத்துக்களை கூறியமைக்காக, கிர்யோஸ், ஒரு மாதத் தடையை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
29 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
32 minute ago
1 hours ago