Shanmugan Murugavel / 2026 ஜனவரி 11 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரிலிருந்து டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அஸ்தன் வில்லாவிடம் தோற்றே தொடரிலிருந்து டொட்டென்ஹாம் வெளியேறியது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை வில்சன் ஒடோபேர்ட் பெற்றதோடு, வில்லா சார்பாக, எமி புயென்டியா, மோர்கன் றோஜர்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற சதர்லேண்டுடனான போட்டியில் 0-3 என்ற ரீதியில் பெனால்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து எவெர்ற்றன் வெளியேறியிருந்தது.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026