2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

‘எஞ்சிய காலம் முழுவதும் மும்பையில் இருக்க வேண்டும்’

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 30 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரின் எஞ்சிய விளையாடும் காலம் முழுவதும் மும்பையிலேயே இருக்க வேண்டும் என தாக்கூரிடம் மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையில் மும்பையின் வலைப்பந்துவீச்சாளராகக் காணப்பட்ட தாக்கூர், ஐ.பி.எல்லில் ஆறு அணிகளில் விளையாடிய பின்னர் கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற போட்டியில் மும்பையில் அறிமுகத்தை மேற்கொண்டு 444 ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவி போட்டியின் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.

கொல்கத்தா வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆறாவது ஓவரை வீச வந்த தாக்கூர், 17 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்ற பின் அலென்னை வீழ்த்திருந்தார். இந்நிலையில் ஆறாவது ஓவரை வீசுவது சவாலானது ஆனால் தான் முன்னர் கூறியது போல சவால்களைத் தான் விரும்புவதாக தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .