Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் கல்விப் பிரிவால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் நிலை பயிற்சிக் கல்வியில் இலங்கையணியின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் பங்கேற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஹேரத் பயிற்சியாளராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்திலுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் திறன் நிலையத்தில் நடாத்தப்படும் ஆறு நாட்கள் கொண்ட குறித்த பயிற்சியில் ஹேரத் தவிர, அஜந்த மென்டிஸ், நுவான் குலசேகர, தம்மிக பிரசாத், பிரசாதினி வீரக்கொடி உள்ளிட்ட 20 பேர் பங்கேற்கின்றனர்.
குறித்த பயிற்சிநெறியானது இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் திறன் நிலையத்தின் பிரபலமான பயிற்சியாளர்களான அவிஷ்க குணவர்தன, பியால் விஜேதுங்க, ஹெஷான் டி மெல், உபுல் சந்தன, ரவீந்திர புஷ்பகுமார, சாமில, கமகே, லங்கா டி சில்வா, சுமித்ர வர்ணகுலசூரிய, தாரக சமரதுங்க, தர்ஷன வீரசிங்க, டில்ஷான் பொன்சேகா ஆகியோராலும் உடற்கூற்று நிபுணர் ரஞ்சித் நாணயக்காரவாலும் நடாத்தப்படுகிறது.
அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வுபெறவுள்ள நிலையில், நுவான் குலசேகர இலங்கையணிக்காக இறுதியாக கடந்தாண்டே விளையாடியிருந்ததோடு, அஜந்த மென்டிஸ், தம்மிக்க பிரசாத் ஆகியோர் இறுதியாக 2015ஆம் ஆண்டே இலங்கையணிக்காக விளையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
2 hours ago