Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்தார் எனத் தெரிவித்து ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார்.
மிற்சல் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், அப்பந்தை அவரை நோக்கி அடித்தார். துடுப்பாட்ட எல்லைக்கோட்டுக்கு வெளியே பென் ஸ்டோக்ஸ் இருப்பதைக் கவனித்த ஸ்டார்க், விக்கெட்டை நோக்கிப் பந்தை எறிய, அதைத் தனது கை மூலம் பென் ஸ்டோக்ஸ் தடுத்திருந்தார். அதனையடுத்து, களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்தார் என அவுஸ்திரேலிய வீரர்கள் ஆட்டமிழப்புக் கோர, அவர் ஆட்டமிழந்ததாக மூன்றாவது நடுவரால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோக்ஸ், '5 அடி தூரத்துக்கு அப்பால் நபரொருவர் நின்றுகொண்டிருக்கும் போது, அச்செய்கை வெறுமனே எதிர்வினை மாத்திரமே. வேண்டுமென்றே நான் எனது கையை நீட்டியிருக்கவில்லை. என்னைப் பாதுகாப்பதற்கான மனித எதிர்வினையே அது" எனத் தெரிவித்தார்.
எனினும், அது குறித்தான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிடும் ஸ்டோக்ஸ், அது குறித்து எதுவும் செய்யப்பட முடியாது எனக குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026