Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா, டொனி க்றூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒஸ்கார் மின்குயெஸ்ஸா பெற்றிருந்தார்.
இப்போட்டியின் முடிவில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 66 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது. அத்லெட்டிகோ மட்ரிட்டும் 66 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும், றியல் மட்ரிட்டுடனான போட்டிகளில் குறைவான பெறுபேறு காரணமாக இரண்டாமிடத்திலுள்ளது. 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 58 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago