2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எல்.பி.எல்லிருந்து ரஸல், டு பிளெஸி விலகல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல், தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் பப் டு பிளெஸி மற்றும் டேவிட் மில்லர், இங்கிலாந்தின் டேவிட் மலன், இந்தியாவின் மன்வீந்தர் பிஸ்லா உள்ளிட்டோர் விலகியுள்ளனர்.

அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளேயே இவர்கள் விலகியுள்ளனர்.

அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க, இங்கிலாந்துக்கிடையேயான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களுக்காகவே மில்லர், டு பிளெஸி, மலன் ஆகியோர் விலகியுள்ளதுடன், ரஸல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்நிலையில், மன்வீந்தர் பிஸ்லா விலகியதுக்கான காரணம் தெரியவில்லை.

எல்.பி.எல்லானது அடுத்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X