Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அர்யனா சபலெங்கா சம்பியனானார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒன்பதாம் நிலை வீராங்கனையான அமன்டா அனிசிமோவாவை எதிர்கொண்ட பெலாரஸின் சபலெங்கா, 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சபலெங்கா வென்றும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் நயோமி ஒஸாகாவை 6-7 (4-7), 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் ஐ. அமெரிக்காவின் அனிசிமோவாவும் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago