2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஐ.சி.சி பெண்கள் சம்பியன்ஷிப்: சம்பியனானது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான ஐ.சி.சி பெண்கள் சம்பியன்ஷிப் தொடரை, அத்தொடருக்கான போட்டிகள் இன்னமும் எஞ்சியிருக்கும் நிலையிலேயே, அந்தத் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறும் அணிகளைத் தெரிவுசெய்வதற்காக, 2 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அனைத்தும் கணிக்கப்பட்டே, இந்தத் தொடரில் வெற்றியாளர் கணிக்கப்படுவர்.

இதன்படி, தனது அணிக்கான 21 போட்டிகளில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி, 30 புள்ளிகளைப் பெற்று, அந்தத் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியுள்ளது. 18 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 23 புள்ளிகளுடன் காணப்படுவதோடு, எஞ்சியுள்ள 3 போட்டிகளை வென்றாலும், 29 புள்ளிகளையே அதிகபட்சமாகப் பெற முடியும். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3ஆவது இடத்தில் காணப்படுகிறது. இம்மூன்று அணிகளும், உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெற்றுள்ளன.

இறுதி இடத்தில் காணப்படும் இலங்கை அணியும் அதற்கு முன்னைய இடத்தில் காணப்படும் பாகிஸ்தான் அணியும், தகுதிகாண் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளமை உறுதியாகியுள்ளது. 4 தொடக்கம் 6ஆம் இடங்களில் காணப்படும் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளில் ஓர் அணி, நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .