Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான போட்டியில் 169 ஓட்டங்களை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற குஜராத்தின் அணித்தலைவர் ஷுப்மன் கில், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, அர்ஷாட் கான், மொஹமட் சிராஜ் (3), இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் (2), பிரசீத் கிருஷ்ணாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் லியம் லிவிங்ஸ்டோன் 54 (40), ஜிதேஷ் ஷர்மா 33 (21), டிம் டேவிட் 32 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026