Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2025 மார்ச் 28 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான போட்டியில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சுப்பர் கிங்ஸின் அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, அணித்தலைவர் ரஜாட் பட்டிடாரின் 51 (32), பில் ஸோல்டின் 32 (16), விராட் கோலியின் 31 (30), தேவ்டுட் படிக்கல்லின் 27 (14), டிம் டேவிட்டின் ஆட்டமிழக்காத 22 (08), ஜிதேஷ் ஷர்மாவின் 12 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில் நூர் அஹ்மட் 4-0-36-3, மதீஷ பத்திரண 4-0-36-2, கலீல் அஹ்மட் 4-0-28-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago