Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் றிஷப் பண்ட், சென்னையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்னை, ஆரம்பத்திலேயே ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸிடம் பப் டு பிளெஸி, ருத்துராஜ் கைக்வாட்டை இழந்து தடுமாறியது.
பின்னர் மொயின் அலியின் 36 (24), சுரேஷ் ரெய்னாவின் 54 (36) ஓட்டங்கள் மூலம் மீண்ட சென்னை, அம்பாதி ராயுடுவின் 23 (16), இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 26 (17), சாம் கர்ரனின் 34 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. வோக்ஸ், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு, 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஷீகர் தவானின் 85 (54), பிறித்திவி ஷாவின் 72 (38) ஓட்டங்களோடு, 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஷீகர் தவான் தெரிவானார்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026