Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 02 , மு.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, சென்னையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, அம்பாதி ராயுடுவின் ஆட்டமிழக்காத 72 (27), மொயின் அலியின் 58 (36), பப் டு பிளெஸியின் 50 (28) ஓட்டங்களுடன், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கெரான் பொலார்ட், இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ராகுல் சஹர், நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு, 219 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை, பொலார்ட்டின் ஆட்டமிழக்காத 87 (34), குயின்டன் டி கொக்கின் 38 (28), ரோஹித்தின் 35 (24), க்ருனால் பாண்டியாவின் 32 (23), ஹர்டிக் பாண்டியாவின் 16 (07) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், சாம் கர்ரன், நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு ஓவரில் ஓர் ஓட்டத்துக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பொலார்ட் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago