Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற லக்னோவின் அணித்தலைவர் லோகேஷ் ராகுல், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, ஆரம்பத்திலேயே அஜின்கியா ரஹானேயை மற் ஹென்றியிடம் இழந்ததுடன் சிறிது நேரத்தில் டரைல் மிற்செல்லை யஷ் தக்கூரிடம் இழந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் இரவீந்திர ஜடேஜாவை மொஷின் கானிடம் இழந்தது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட்டின் ஆட்டமிழக்காத 108 (60), ஷிவம் டுபேயின் 66 (27) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 211 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்னோவும் ஆரம்பத்திலேயே குயின்டன் டி கொக்கை தீபக் சஹரிடம் இழந்ததுடன், ராகுலை சிறிது நேரத்தில் முஸ்தபிசூர் ரஹ்மானிடம் பறிகொடுத்ததுடன் பின்னர் யஷ் தக்கூருக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் வீரராகக் களமிறங்கிய தேவ்டுட் படிக்கல்லை மதீஷ பத்திரணவிடம் இழந்தது.
எனினும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் ஆட்டமிழக்காத 124 (63), நிக்கலஸ் பூரானின் 34 (15), தீபக் ஹூடாவின் ஆட்டமிழக்காத 17 (06) ஓட்டங்களோடு 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவானார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026