Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், அஹ்மதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா, பஞ்சாப்பை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், பற் கமின்ஸ், ஷிவம் மவி, பிரசீத் கிருஷ்ணா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தியிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், கிறிஸ் ஜோர்டான் 30 (18), மாயங்க் அகர்வால் 31 (34), நிக்கலஸ் பூரான் 19 (19), லோகேஷ் ராகுல் 19 (20), ஷாருக் கான் 13 (14) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், மவி நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், நரைன் நான்கு ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பிரசீத் கிருஷ்ணா நான்கு ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு, 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மொஹமட் ஷமி, அர்ஷ்டீப் சிங்கிடம் விகெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும், மோர்கனின் ஆட்டமிழக்காத 47 (40), ராகுல் ட்ரிபாதியின் 41 (32), தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 12 (06), அன்ட்ரே ரஸலின் 10 (09) ஓட்டங்களோடு, 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ரவி பிஷ்னோய் நான்கு ஓவர்களில் 19 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்ததுடன், ஷமி நான்கு ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மோர்கன் தெரிவானார்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026