2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய சென்னை

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இஷன் கிஷன் 32 (21), டிம் டேவிட் 31 (22), அணித்தலைவர் றோஹித் சர்மா 21 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 4-0-20-3, மிற்செல் சான்ட்னெர் 4-0-28-2, டுவைன் பிறிட்டோறியஸ் 4-0-28-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 158 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், அஜின்கியா ரஹானே 61 (27), ருத்துராஜ் கை கவாட் ஆட்டமிழக்காமல் 40 (36), ஷிவம் டுபே 28 (26), அம்பாதி ராயுடு ஆட்டமிழக்காமல் 20 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குமார் கார்த்திகேயா 4-0-24-1, ஜேஸன் பெஹ்றென்டோர்ப் 3-0-24-1, கமரொன் கிறீன் 3-0-20-0என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஜடேஜா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .