2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.பி.எல்: மும்பையை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை, ஆரம்பத்திலேயே குயின்டன் டி கொக்கை மார்க்கஸ் ஸ்டொய்னிஸிடம் இழந்தது. எனினும், ரோஹித்தின் 44 (30), சூரியகுமார் யாதவ்வின் 24 (15) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றது.

தொடர்ந்து ஆவேஷ் கான் (2), அமித் மிஷ்ரா (4), லலித் யாதவ் (1), ககிஸோ றபாடாவிடம் (1) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்த மும்பை, இஷன் கிஷனின் 26 (28), ஜெயந்த் யாதவ்வின் 23 (22) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 9 விக்கெடுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில், மிஷ்ரா நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான், இரன்டு ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லலித் யாதவ் நான்கு ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஸ்டொய்னிஸ் மூன்று ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 138 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஆரம்பத்திலேயே ஜெயந்த் யாதவ்விடம் பிறித்திவி ஷாவை இழந்தது. பின்னர், ஷீகர் தவானின் 45 (42), ஸ்டீவ் ஸ்மித்தின் 33 (29) ஓட்டங்களோடு இனிங்ஸை நகர்த்திய டெல்லி, முதலில் ஸ்மித்தை கெரான் பொலார்ட்டிடமும், பின்னர் தவானை ராகுல் சாஹரிடமும், தொடர்ந்து அணித்தலைவர் றிஷப் பண்டை ஜஸ்பிரிட் பும்ராவிடமும் இழந்தது.

எனினும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத 14 (09), லலித் யாதவ்வின் ஆட்டமிழக்காத 22 (25) ஓட்டங்களோடு, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை டெல்லி அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மிஷ்ரா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .