Shanmugan Murugavel / 2026 ஜனவரி 04 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவும், நான்காவது போட்டியில் இங்கிலாந்தும் வென்ற நிலையில், சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அவுஸ்திரேலிய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஜஹை றிச்சர்ட்சனை பியூ வெப்ஸ்டர் பிரதியிட்டதோடு, இங்கிலாந்து அணியில் குஸ் அட்கின்ஸனை மத்தியூ பொட்ஸ் பிரதியிட்டிருந்தார்.
ஆரம்பத்திலேயே மிற்செல் ஸ்டார்க், மைக்கல் நேஸர், ஸ்கொட் போலண்டிடம் பென் டக்கெட், ஸக் குறோலி, ஜேக்கப் பெத்தெல்லை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.
பின்னர் ஜோ றூட், ஹரி ப்றூக் இணைப்பாட்டத்தில் மழையால் 45 ஓவர்களே முதல் நாளில் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. றூட் 72, ப்றூக் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago