Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்மியுலா வண் பருவகாலத்தின் ஆரம்பப் பந்தயமான அவுஸ்திரேலிய குரான் பிறீயானது ஒத்தி வைக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாகவே அவுஸ்திரேலிய குரான் பிறீ ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
மெல்பேணில் இவ்வாண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடக்க அவுஸ்திரேலிய குரான் பிறீ ஏற்பாடாகியுள்ளது.
இந்நிலையிலேயே, அவுஸ்திரேலிய குரான் பிறீ நிறுவனமும், அவுஸ்திரேலிய அரசாங்கமும், போர்மியுலா வண் தலைவர்களும் குறித்த பந்தயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பந்தயத்தை மீண்டும் நடத்த எதிர்பார்த்துள்ளதாக போர்மியுலா வண் பேச்சாளரொருவர் குறிப்பிட்டபோதும் எங்கெனத் தெரிவித்திருக்கவில்லை. அடுத்தாண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பஹ்ரேய்ன் குரான் பிறீ நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வருகை தருவோருக்கு கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் பின்பற்றுகிறது.
மக்கலரென் அணியின் உறுப்பினரொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியமையைத் தொடர்ந்து, கடந்தாண்டு அவுஸ்திரேலிய குரான் பிறீயானது முதலாவது பயிற்சி ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்கள் முன்பு இரத்தாகியிருந்தது.
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago